கெங்கையம்மன் கோவிலில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.
குடியாத்தம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் அசம்பாவிதம் ஏற்படாவண்ணம் மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் திருவிழா என்பதாலும் வடக்கு மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஆகியோர் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்ிரண்டு ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் வேலூர் மாவட்டம் மோப்ப நாய் பிரிவினர் மோப்பநாய் அக்னியுடன் கெங்கையம்மன் கோவிலில் நேற்று இரவு சோதனை செய்தனர். தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மெட்டல்டிடெக்டர் கருவி மூலம் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story