யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 13 May 2022 9:29 PM IST (Updated: 13 May 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் அருளரசு தலைமை தாங்கினார். 

துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் ஜெயகணேஷ் வரவேற்றார். யோகா ஆசிரியர் புருஷோத்தமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை வழங்கினார். ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தாடாசனம, வீரபத்ராசனம், மச்சியாசனம், பத்மாசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரவீன்ராஜ் செய்திருந்தார்.

Next Story