ஆனைமலை உப்பாற்று பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


ஆனைமலை உப்பாற்று பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
x
தினத்தந்தி 13 May 2022 9:35 PM IST (Updated: 13 May 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை உப்பாற்று பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


ஆனைமலை

ஆனைமலை உப்பாற்று பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பாற்று பாலம்

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை முக்கோணத்தில் இருந்து காக்காகொத்திபாறை, வெப்பரை, சுள்ளிமேட்டுபதி, கே.பி.எம். காலனி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வசதியாக உப்பாற்றின்  குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது.

அந்த பாலத்தின் ஓரத்தில் குடிநீர் குழாய் மற்றும் தனியார் தோட்டத்துக்கு தண்ணீர் செல்லும் குழாய் செல்கிறது. அந்த குழாய்களில் இருந்து தண்ணீர் கசிந்து உப்பாற்று பாலத்தில் கடந்த ஒருவாரமாக எப்போதும் தேங்கி நிற்கிறது.

விபத்து அபாயம்

இதனால் அந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் ஒரு வாகனம் வரும் போது மற்றொரு வாகனம் தண்ணீரில் இறங்கி செல்கிறது. 

இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் பாலத்தில் செல்லும் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சிய டித்து செல்வதால் நடந்து செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.  எப்போதும் தண்ணீர் தேங்கி நின்றால் பாலம் வலுவிழந்து சேதமடைய வாய்ப்பு உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இது குறித்து வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது

ஆனைமலை உப்பாற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் ஓரத்தில் உள்ள குழாய்களில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது. 

இதனால் கடந்த சில நாட்களாக பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் பாலம் சேதம் அடைந்தால் பல கிராமங்களுக்கு போக்கு வரத்து துண்டிக்கப்படும். விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். 

எனவே தண்ணீர் குழாய்களில் கசிவு ஏற்படுவதை தடுக்க வேண்டும். பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். 

வெப்பரை, சுள்ளிமேட்டுபதி, காக்காகொத்திபாறை ஆகிய சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story