திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.15 கோடி வருமானம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.15 கோடி வருமானம்
x
தினத்தந்தி 13 May 2022 9:41 PM IST (Updated: 13 May 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது

திருச்செந்தூர்;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகள் மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாதம் முதல் முறையாக கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில், தக்கார் பிரதிநிதியும் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், உதவி ஆணையர் சங்கர், அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர்கள் செல்வநாயகி, சண்முகராஜ், பொது மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 410 கிடைத்துள்ளது.
அதேபோல் தங்கம் 1,190 கிராமும், வெள்ளி 15 ஆயிரத்து 900 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு நோட்டுகள் 284 கிடைத்துள்ளது.

Next Story