பொள்ளாச்சி- பாலக்காடு வழித்தடத்தில் மீனாட்சிபுரம் ரெயில் பாதை மற்றும் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது

பொள்ளாச்சி- பாலக்காடு வழித்தடத்தில் மீனாட்சிபுரம் ரெயில் பாதை மற்றும் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 13 May 2022 9:50 PM IST (Updated: 13 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி- பாலக்காடு வழித்தடத்தில் மீனாட்சிபுரம் ரெயில் பாதை மற்றும் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது

ஆனைமலை

பொள்ளாச்சி- பாலக்காடு வழித்தடத்தில் மீனாட்சிபுரம் ரெயில் பாதை மற்றும் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி- பாலக்காடு வழித்தடத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரெயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.  

அந்த வகையில், பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் சுங்கத்தில் இருந்து ஆனைமலை செல்லும் ரோட்டில் சுப்பே கவுண்டன்புதூர் உள்ளது. இங்கு ெரயில்வே கேட் உள்ளது. 

இந்த ரெயில்வே கேட் நாளை மறுநாள் (திங்கட்கிழமை)  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அடைக்கப்படுகிறது. 

எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் சுப்பேகவுண்டன்புதூர் ெரயில்வே பாலம் சுந்திரபுரி வழியே மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

மீனாட்சிபுரம்

இது போல் பெரியபோது ரோட்டில் உள்ள ெரயில்வே கேட் வருகிற 17-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அடைக்கப்படுகிறது. 

எனவே அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மற்றும் வாகனங்கள் சத்தி சோயாஸ் - வழைக் கொம்பு வழியாக செல்ல வேண்டும்.

மீனாட்சிபுரம் பிரிவு ெரயில்வேகேட் வருகிற 18-ந் தேதி அடைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் கணபதிபாளையம் பெரியகோட்டை பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாற்றுப்பாதை

மீனாட்சிபுரம் ெரயில் நிலையம் அருகே உள்ள ெரயில்வே கேட் வருகிற 19-ந் தேதி அடைக்கப்படுகிறது. 

எனவே அந்த வழியாக செல்பவர்கள், கோவிந்தாபுரம், பெரியபோது ரோட்டை மாற்று வழித்தடமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை ெரயி ல்வே நிர்வாகம் மற்றும் போலீசார்  தெரிவித்து உள்ளனர்

Next Story