மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
அணைக்கட்டு அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.
அணைக்கட்டு
அணைக்கட்டு அடுத்த ஊனை கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பழனி (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருக்கு சோபா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் பிச்சா நத்தம் கிராமத்தில் கட்டிட வேலை செய்வதற்காக பழனி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மின்சார வயர் அறுந்து விழுந்தது கிடந்ததை கவனிக்காமல் வயர் மீது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story