'மனைவியின் பேச்சை கேளுங்கள்"-நெட்டிசன்களுக்கு புனே போலீஸ் கமிஷனர் அறிவுரை
மனைவியின் பேச்சை கேளுங்கள் என நெட்டிசன்களுக்கு புனே போலீஸ் கமிஷனர் அறிவுரை கூறியுள்ளார்.
புனே,
புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா சமீபத்தில் பொது மக்களுடன் உரையாடும் வகையில் டுவிட்டரில் லவ்வித்சிபி புனேசிட்டி என்ற ஹாஷ் டாக்கை தொடங்கினார். இதன் மூலம் அவர் சமீபத்தில் டுவிட்டரில் நெட்டிசன்களுடன் உரையாடினார். அப்போது அவர் பலரின் கேள்விகளுக்கு ருசிகரமான பதில்களை அளித்தார். இதில் நெட்டிசன் ஒருவர் ''நான் மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு மாறலாம் என நினைக்கிறேன். ஆனால் என் மனைவி புனேக்கு மாறலாம் என கூறுகிறார். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்" என கேட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த கமிஷனர், "இரண்டும் அழகான நகரங்கள் தான். ஆனால் சட்டப்புத்தகம் என்ன சொல்கிறது என்றால், 'எப்போதும் மனைவியின் பேச்சை கேளுங்கள்' என கூறுகிறது. நான் உள்பட எல்லோரும் இதை தான் செய்கிறோம்." என கூறியுள்ளார்.
இதேபோல ஒருவர் சிக்னலை மீறி செல்லும் வாகனங்களின் சாவியை போலீசார் எடுத்து செல்வது அவசியமா என கேட்டு இருந்தார். அதற்கு கமிஷனர் சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது அவசியமா? என கூறியிருந்தார்.
இதேபோல பல தரப்பட்ட கேள்விகளுக்கும் கமிஷனர் பதில் அளித்து இருந்தார்.
Related Tags :
Next Story