கரூர் பஸ்நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூர் பஸ்நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கரூர்
ஆய்வு
கரூரில் அமைந்துள்ள கரூர் பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ்நிலையம் பகுதியில் அமைந்துள்ள கழிப்பிடங்களில் சுகாதாரம் மற்றும் நீர்வழித்தடங்கள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மேலும் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து கட்டியிருந்த கான்கிரீட் மேடைகள் மற்றும் கொட்டகைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கரூர் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் கரூர் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 50-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகள், உணவகங்களின் கொட்டகைகள், கான்கிரீட் மேடைகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story