மாநகராட்சி சொத்துக்கள் பட்டியலிடும் பணி தீவிரம்


மாநகராட்சி சொத்துக்கள் பட்டியலிடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 May 2022 10:09 PM IST (Updated: 13 May 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி சொத்துக்கள் பட்டியலிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சொத்து பட்டியல் விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

வேலூர்

வேலூர் மாநகராட்சி சொத்துக்கள் பட்டியலிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சொத்து பட்டியல் விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பட்டியலிடும் பணி

வேலூர் மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து சொத்து விவரங்களையும் பட்டியலிடும் பணி மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

4 மண்டலங்களிலும் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும், சொத்துக்களை பாதுகாக்கவும் அனைத்து சொத்துகளும் பட்டியலிடும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

பொதுமக்கள் பார்க்கலாம்

மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்கள், குடிநீர் தொட்டிகள், சாலைகள், பள்ளிகள், அலுவலகங்கள், கட்டிடங்கள், காலி இடங்கள் உள்ளிட்டவை பட்டியலிடப்படுகிறது. அந்த பணிகள் உடனுக்குடன் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனுடன் அந்த சொத்துகளுக்கான மதிப்பீட்டு தொகையும் பதிவேற்றப்படுகிறது. இதனை பொதுமக்கள் பார்வையிடலாம். இதன் மூலம் வருங்காலங்களில் மாநகராட்சி பகுதிகள் ஆக்கிரமிப்பை தடுக்கலாம். பல்வேறு பணிகளுக்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும். இந்த பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட உள்ளது.

Next Story