சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 13 May 2022 10:10 PM IST (Updated: 13 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள நஞ்சைபுகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு புனித நீரால் நீராடப்பட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மலர்களாலும், அருகம்புல்களாலும் மாலை அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமரவைத்து கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர், நன்னீர் சவுந்திரநாயகி ஆகிய கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம்  வழங்கப்பட்டது.

Next Story