நவாப் மாலிக்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு
நவாப் மாலிக்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. எனினும் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி வழங்கி உள்ளது.
மும்பை,
நவாப் மாலிக்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. எனினும் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி வழங்கி உள்ளது.
ஜாமீன் மறுப்பு
பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மாநில மந்திரி நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நவாப் மாலிக் மருத்துவ காரணங்களுக்காக 6 மாத இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
மனுவில் அவர் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஆர்.என். ரோகடே முன் நடந்தது. இதில் நீதிபதி நவாப் மாலிக்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.
சிகிச்சைக்கு அனுமதி
அதே நேரத்தில் நவாப் மாலிக் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொள்ள அனுமதி வழங்கினார். மேலும் சிகிச்சையின் போது நவாப் மாலிக் மகள் அவருடன் இருக்கலாம் என தெரிவித்தார்.
இதேபோல நவாப் மாலிக்கை டாக்டரிடம் அழைத்து செல்லாமல் இருந்த அமலாக்கத்துறையை நீதிபதி கண்டித்தார்.
Related Tags :
Next Story