விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
உத்தமபாளையம் அருகே உள்ள பரமத்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த சமுத்திரபாண்டியன் மகன் அஜித்பாண்டியன் (வயது 22). இவர்கள் தற்போது குடும்பத்துடன் பிச்சம்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். அஜித்பாண்டியனை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது பெற்றோர் மது அருந்தி வந்ததற்கு கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலப்பர்கோவில் பகுதியில் உள்ள உறவினரின் தனியார் பண்ணைக்கு வேலைக்கு சென்ற அஜித்பாண்டியன் அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story