தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 May 2022 10:36 PM IST (Updated: 13 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


ஏரியில் உள்ள செடிகள் அகற்றம்
அரியலூர் மாவட்டம், உத்திரக்குடி கிராமத்தில் பெரியஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துணிகள் துவைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தாமரை மற்றும் தேவையில்லாத முட்செடிகள் அதிக அளவில் இந்த ஏரியில் முளைத்துள்ளன. இதனால் ஏரியில் குளிப்பவர்களுக்கு அரிப்பு மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விக்னேஷ், உத்திரக்குடி, அரியலூர். 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் குப்பைகளை முறையாக சேகரிக்கப்படாததால் ஆங்காங்கே சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் எல்லைகல் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தேவக்குமார்,  உடையார்பாளையம், அரியலூர். 

Next Story