கால்நடை மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு
அம்மூர் கால்நடை மருந்தகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
அம்மூர் கால்நடை மருந்தகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நோய் பாதிப்புகள்
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் உள்ள கால்நடை மருந்தகத்தில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
ஒரு நாளைக்கு எத்தனை கால்நடைகள் வருகின்றன, கால்நடைகள் எந்தப் பிரச்சினைகளுக்காக மருந்தகத்துக்கு கொண்டு வரப்படுகிறது, பெரும்பாலான கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் என்ன, சினை ஊசிகள் எத்தனை கால்நடைகளுக்கு செலுத்தப்படுகிறது எனக் கேட்டறிந்தார்.
பின்னர் மருந்தகத்தில் கால்நடைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மருந்துகள் குறித்தும், தாது உப்புகள் குறித்தும் அசோலா வளர்ப்பு குறித்தும், அசோலா பயிர் வளர்ப்பு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து, விளக்கங்களை கேட்டறிந்தார்.
பதிவேடுகள்
அதைத்தொடர்ந்து மருந்தகத்தில் பரமரிக்கப்பட்டு வரும் வருகைப் பதிவேடு, பணப் பதிவேடு, செயற்கை முறையில் கருவூட்டல், சினை ஊசிகள் செலுத்தும் கையேடு, கால்நடைகள் இனம் குறித்த பதிவேடு, எந்த மாடுகள் எவ்வளவு பால் கொடுக்கும் என்பது குறித்த பதிவேடுகள், மாட்டினம் மற்றும் நாள்தோறும் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்த பதிவேடு, நோய்கள் ஏற்படுவது குறித்த பதிவேடுகள், கால்நடைகளுக்கு நாள்தோறும் தடுப்பூசி செலுத்தும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து கலெக்டர் கையெழுத்திட்டார்.
ஆய்வின்போது வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story