ராமநத்தம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
ராமநத்தம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
ராமநத்தம்
ராமநத்தம் அருகே உள்ள கீழ்கல்பூண்டயில் உள்ள உதவி மின் வாரிய அலுவலகத்தில் கொரக்கவாடியைச் சேர்ந்த வெங்கடாசலம்(47) என்பவர் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று மதியம் சித்தூரில் உள்ள மின்மாற்றியில் பழுதை சரிசெய்வதற்காக ஏறியபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடாசலத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story