இந்திரா நர்சரி, தொடக்க பள்ளியில் பரிசளிப்பு விழா
இந்திரா நர்சரி, தொடக்க பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது. ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராணிப்பேட்டை
திமிரி ஒன்றியம் காவனூரில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் லீட் உலகத்தரமான கல்வித் திட்ட தொடக்க விழா நடந்தது. பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். கணக்காளர் கே.லட்சுமி சேட்டு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, லீட் கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். லீட் கல்வித் திட்டம் குறித்து அதன் பயிற்சியாளர் எஸ்.காமராஜ் விளக்கம் அளித்தார். விழாவில் திமிரி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஜெ.ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் காவனூர் ரஞ்சித் குமார், புங்கனூர் ஜெ.அம்பேத்கர், குப்பம் காமராஜ், சாம்பசிவபுரம் ஜி.சம்பத் மற்றும் வி.எம்.மணி, என்.ஏழுமலை, பொன்னரசன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பிரேமலதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story