தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் நேரம் பஸ் இயக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், நாகமங்கலம் காந்தி நகரில் பார்வையற்ற குடும்பத்தினர் மற்றும் பொம்மை வியாபாரம் செய்யும் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். காந்தி நகர் கிராமத்திற்கு காலை 7 மணிக்கு மட்டும் ஒரு அரசு பஸ் வந்து செல்கிறது. இரவில் பஸ் வசதி இல்லை. அதனால் ஊதுபத்தி விற்பனை செய்யும் பார்வையற்றவர்களும், பொம்மை வியாபாரம் செய்பவர்களும் ஆலம்பட்டி ரோடு என்ற பஸ் நிறுத்தத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே காலை 7 மணிக்கு வரும் அரசு பஸ் இரவு 9 மணிக்கும் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முனியப்பன், காந்தி நகர், திருச்சி.
எரியாத மின் விளக்கு
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் மண்ணச்சநல்லூர், திருப்பஞ்சிலி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால்பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாக்கியராஜ், திருச்சி.
Related Tags :
Next Story