மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே உள்ள சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 70). விவசாயி. இவரது மனைவி ராசம்மாள்(65). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக ராசம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்து பிரச்சினை சம்பந்தமாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் தனது மகனின் வீட்டில் ராசம்மாள் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் முத்துசாமி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துசாமி, ராசம்மாைள அரிவாளால் தாக்கியுள்ளார். இதனால் ராசம்மாளுக்கு வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ராசம்மாளின் மகன் சக்திவேல் அவரை ஆம்புலன்ஸ் வரவழைத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராசம்மாள் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துசாமியை தீவிரமாக தேடி வருகிறார்.
Related Tags :
Next Story