காவலாளி தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய காவலாளி விஷ மாத்திைரகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story