விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார
மணல்மேடு
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்துள்ள தலைஞாயிறு தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் கீர்த்திகா (வயது 26). இவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால், சரியாக வரன் அமையாததால் மனமுடைந்த கீர்த்திகா சம்பவத்தன்று எலிமருந்தை (விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கீர்த்திகா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story