நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்கள் பற்றிய பட்டியலை திங்கட்கிழமைக்குள் வழங்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்கள் பற்றிய பட்டியலை திங்கட்கிழமைக்குள் வழங்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சென்னை ஐகோர்ட்டு வழக்குகள் மற்றும் வருவாய்த்துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பட்டியல்
மாவட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கில் எத்தனை குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறித்த விவரங்களை தயார்செய்து நாளைமறுநாள் (திங்கட்கிழமை) அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 248 ஏரிகளின் பரப்பளவு மற்றும் நீர்வரத்து கால்வாய்களின் பரப்பளவின் விவரங்களை நிலஅளவீடு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில் எங்கெல்லாம் பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள் என்ற விபரங்களை ஒருவாரத்தில் தயார்செய்து வழங்க வேண்டும்.
வீட்டுமனை பட்டா
இவர்களுக்கு தேவையான இலவச வீட்டுமனை பட்டா, பழங்குடியினர் சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 முதல் 15 குடும்பங்கள் ஒரே இடத்தில் வாழ்வதற்கு ஏதுவாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை அட்டை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, தாசில்தார்கள் சம்பத், பழனி, பூங்கொடி, நகராட்சி ஆணையர்கள் ஜெயராமராஜா, பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story