நாமக்கல்லில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம்
நாமக்கல்லில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குழுவின் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கலெக்டருமான ஸ்ரேயா சிங், குழு உறுப்பினர்கள் கணேசமூர்த்தி எம்.பி., ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழு தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து துைற திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிலுவையில் உள்ள வளர்ச்சிப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story