அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் 6 மாணவிகளுக்கு சிறிய மடிக்கணினி
அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் 6 மாணவிகளுக்கு சிறிய மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில் இந்த ஆண்டு சிவகங்கை மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கும் காஞ்சனா (திருப்பூர் மாவட்டம்), சுவீதா (விழுப்புரம் மாவட்டம்), மாதீஸ்வரி (சிவகங்கை மாவட்டம்), முனிரெத்தினம்(தர்மபுரி மாவட்டம்),சுவாதி (புதுக்கோட்டை மாவட்டம்),பிரியா (சேலம் மாவட்டம்) ஆகிய 6 மாணவிகளுக்கு, தமிழக அரசின் உத்தரவின்படி, டேப் என்று அழைக்கப்படும் சிறிய மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, துணை முதல்வர் சர்மிளா திலகவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story