மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி பலி


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 14 May 2022 12:23 AM IST (Updated: 14 May 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

கீரனூர், 
திருமணம் நிச்சயதார்த்தம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த நவப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் அய்யப்பன் (வயது 25). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். கொங்குதிரையன் பட்டியை சேர்ந்த சங்கர் மகள் ஆர்த்தி (21). இவர் திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்தநிலையில் அய்யப்பன் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
இதையடுத்து, ஆர்த்திக்கும், அய்யப்பனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. 
கல்லூரி மாணவி பலி
இந்தநிலையில் ஆர்த்தி கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக அய்யப்பனுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் கல்லூரி வந்துவிட்டு மீண்டும் சித்தன்னவாசலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னவாசல் பிரிவு சாலையில் திரும்பும் போது எதிரே ராமநாதபுரத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆர்த்தி பரிதாபமாக இறந்தார். அய்யப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாடனையை சேர்ந்த வேன் டிரைவர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story