கட்டிமாங்கோடு ஊராட்சியில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
கட்டிமாங்கோடு ஊராட்சியில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
திங்கள்சந்தை,
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மூலச்சன் விளை கிராமத்தில் கடந்த 9 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி பெண்கள் நேற்று மாலை காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மூலச்சன்விளை நுழைவு வாயில் சாலையை மறித்து நடந்தது.
இதற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சியின் கிளை செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சுசீலா, பெண்கள் சங்க மாவட்ட தலைவர் கார்மல், நிர்வாகிகள் அர்ஜூனன், ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் அந்தோணிமுத்து கலந்து கொண்டு பேசினார். சம்பவ இடத்துக்கு குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் இரணியல் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திங்கட்கிழமைக்குள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story