ராயக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை
ராயக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
10-ம் வகுப்பு மாணவன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். விவசாயி. இவரது மகன் ஹரிஸ் (வயது 17). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் கடந்த 4 மாதமாக பள்ளிக்கு செல்லாத நிலையில் தனது தந்தையிடம் புதிய செல்போன் வாங்கி கொடுக்குமாறு கேட்டான்.
ஆனால் அவரது தந்தை செல்போன் வாங்கி கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் ஹரிஸ் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள கால்நடை கொட்டகையில் வைத்து விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தான்.
பரிதாப சாவு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செல்போன் வாங்கி கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story