மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு


மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
x
தினத்தந்தி 14 May 2022 12:34 AM IST (Updated: 14 May 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்

திருப்புவனம்,
மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 19). பெயிண்டர். இந்த நிலையில் நேற்று திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த புலியூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயிண்ட் அடிக்கும் போது மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story