சூளகிரி அருகே வடமாநில தொழிலாளி சாவு
சூளகிரி அருகே வடமாநில தொழிலாளி இறந்தார்.
சூளகிரி:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பகுல் போரோ (வயது 36). இவர் சூளகிரி அருகே சப்படியில் தங்கி தனியார் கிரானைட் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தபோது, கிரானைட் கல் ஒன்று கீழே விழுந்தது. இதனால் தப்பிக்க பகுல் போரா கீழே குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி மீது விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பகுல் போரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story