தர்மபுரியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி
தர்மபுரியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி:
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் பெரியார் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி பெரியார் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் மோகனசுந்தரம், தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, நேரு இளையோர் மைய மேற்பார்வையாளர் வேல்முருகன், மனவளக்கலை பேராசிரியர் தண்டவேல், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோவிந்தராஜ், கள விளம்பர உதவியாளர் வீரமணி ஆகியோர் யோகா பயிற்சியின் மூலம் மன அமைதி, உடல் வலிமை கிடைக்கும் முறைகள் குறித்து விளக்கினார்கள். கல்லூரி மாணவ-மாணவிகள் தொடர்ந்து யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. யோகா விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது.
Related Tags :
Next Story