ஆலங்குளத்தில் ரூ.11.33 கோடியில் அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா


ஆலங்குளத்தில் ரூ.11.33 கோடியில் அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 14 May 2022 12:39 AM IST (Updated: 14 May 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் ரூ.11.33 கோடியில் அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது

ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் ரூ.11.33 கோடியில் அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் ஞானதிரவியம் எம்.பி., மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அடிக்கல் நாட்டு விழா
ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.11.33 கோடியில் நிரந்தர கட்டிடம் அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆலங்குளம்- தென்காசி சாலையில் மலைக்கோவில் அடிவாரத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி., மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், கல்லூரி கல்வி இணை இயக்க உதவி இயக்குனர் மயிலம்மாள், செயற்பொறியாளர் சத்யவாகேஸ்வரன், கல்லூரி முதல்வர் கலைமகள், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றிய குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் ஒன்றியக்குழு தலைவர் காவேரி சீனித்துரை, கழுநீர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், தி.மு.க. ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ராதா, கணபதி, ஆலங்குளம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நிக்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரசு மகளிர் கல்லூரியானது 3 தளங்களுடன் 50 ஆயிரத்து 416 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இங்கு வகுப்பறைகளுடன் அலுவலக அறை, பதிவு வைப்பறை, முதல்வர் அறை, மாணவர் கூட்டுறவு பண்டகசாலை, உடல் நல மையம், நூலகம், ஆய்வகம், கருத்தரங்கு கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
ரேஷன் கடை கட்டிடம்
மானூரில் புதிய ரேஷன் கடை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். இதற்கென தனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் வழங்கியுள்ளார். விழாவில், மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பொன்ராஜ், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் மணி, ம.தி.மு.க. தலைமை இணையதள தொடர்பாளர் மின்னல் அலி, மாவட்ட பிரதிநிதி தொப்பி மைதீன், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மானூர் பஞ்சாயத்தில் ரூ.12 லட்சத்தில் புதிய ரேஷன் கடை அமைக்கவும், தெற்கு வாகைக்குளத்தில் ரூ.6½ லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் அமைக்கவும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story