ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது


ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 May 2022 12:41 AM IST (Updated: 14 May 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணின் நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டிய வாலிபரை நாகை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வெளிப்பாளையம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு, அடையாளம் தெரியாத வாட்ஸ்- அப் எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் அந்த குறுந்தகவலை ஓபன் செய்து பார்த்தபோது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த வாலிபரின் தங்கையின் நிர்வாண புகைப்படங்கள் அதில் வந்து இருந்தது.
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் 
இதனையடுத்து அந்த வாலிபர் செல்போனில் தனது தங்கையின் நிர்வாண படங்களை அனுப்பிய வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். 
மறுமுனையில் பேசிய நபர், அந்த வாலிபரிடம் உனது தங்கையின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் அவர் நிர்வாணமாக குளிக்கும் வீடியோ என்னிடம் உள்ளது. அவற்றை அழிக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும். அப்படி பணம் தராவிட்டால், புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார். 
வாலிபர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், இதுகுறித்து நாகை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
போலீசாரின் தீவிர விசாரணையில் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு வாட்ஸ்-அப்பில் நிர்வாண படங்களை அனுப்பி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியவர் சென்னை காலடிப்பேட்டை வடக்கு மடத்தெருவை சேர்ந்த மகேஷ்(வயது 24) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து நாகை சைபர் கிரைம் போலீசார் சென்னைக்கு சென்று மகேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story