இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ரெயில்வே துறையை கண்டித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில்வே துறையை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்க மாநில செயலாளருமான மாசிலாமணி கலந்து கொண்டு பேசினார். இதில் நகர துணை செயலாளர் செல்வம், நகர செயற்குழு உறுப்பினர் முகமது இஷாக், செல்லமணி, தர்மதாஸ், சின்னத்தம்பி, அன்னபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா காலத்தில் முக்கிய ரெயில்களை மட்டும் இயக்கி எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்த ரெயில்வே துறை, தற்போது அனைத்து ரெயில்களையும் இயக்கும் நிலையில், சாதாரண ரெயில்களுக்கு எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கும் ரெயில்வே துறையை கண்டித்தும், சைக்கிள் நிறுத்த கட்டணம் ரூ.15 வசூலிப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story