வெவ்வேறு சம்பவங்களில் கூலி தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் கூலி தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சமயபுரம், மே.14-
வெவ்வேறு சம்பவங்களில் கூலி தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கூலி தொழிலாளி
மண்ணச்சநல்லூரை அடுத்த பூனாம்பாளையம் அருகே உள்ள வடக்கிபட்டியைச் சேர்ந்தவர் கரிகாலன். இவரது மகன் கென்னடி(வயது28).கூலிதொழிலாளியான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் இவருடன் சரியாக பேசவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோமரசம்பேட்டை
சோமரசம்பேட்டை போலீஸ் சரகம் ராமபீமநகர் மேலப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மகிமை அற்புதராஜ் (22). இந்த நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு மகிமை அற்புதராஜ் தற்கொலை செய்ததற்கான கரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகிமைஅற்புதராஜியிடம் பக்கத்து வீட்டை சேர்ந்தகுடும்பத்தினர்இடப்பிரச்சினை காரணமாக தகராறு செய்தனராம். அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story