கண்மாய் நீரில் மூழ்கி மாணவன் சாவு
நீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்தான்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே நீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்தான்.
மாணவன் சாவு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் லிங்கப்பன். இவரது மகன் அகிலேஸ்வரன் என்ற அகிலேஷ் (வயது 10). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தினம் கோடை விடுமுறை என்பதால் அகிலேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து நிலையூர் கண்மாய்க்கு சென்றான்.
அங்கு குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அகிலேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அவன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். சிறிது நேரத்தில் அகிேலஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் பயத்தில் யாரிடமும் சொல்லாமல் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அகிலேஷை அவனது பெற்றோர் பல இடங்களில் இரவு முழுவதும் தேடிப்பார்த்துள்ளனர்.
விசாரணை
இதற்கிடையே நிலையூர் கண்மாயில் சிறுவன் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுரை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அங்கு சென்று சிறுவன் உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தது அகிேலஷ் என்பது தெரியவந்ததால் இதுகுறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் அங்கு சென்று அகிேலசின் உடலை பார்த்து கதறி அழுதனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்மாய் நீரில் மூழ்கி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story