கழிவறையில் கிடந்த 1½ கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் கழிவறையில் கிடந்த 1½ கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டு, மே.14-
திருச்சி விமான நிலையத்தில் கழிவறையில் கிடந்த 1½ கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவறையில் கிடந்த தங்கம்
திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து கடந்த 12-ந் தேதி இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் விமான நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் கழிவறையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர், கழிவறையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தபோது, அதில் தங்கம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அந்த தங்கம் சுங்கத்துறைஅதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கழிவறையில் கிடந்த தங்கத்தின் எடை ஆயிரத்து 450 கிராம் என்றும், அதன் மதிப்பு ரூ.75 லட்சம் என்றும் தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான சுமார் 3½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story