மேலும் 2 பேர் கைது


மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2022 1:14 AM IST (Updated: 14 May 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள கீழ திருத்தங்கல் பள்ளப்பட்டி ரோடு, தேவராஜ் காலனியை சேர்ந்தவர் டேவிட் ராஜா. பட்டாசு தொழிலாளி. இந்நிலையில் கடந்த 4-ந் தேதி சாத்தூர் ரோட்டில் உள்ள மயானத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் குமார் (வயது31), ஸ்டாலின் (39) ஆகிய 2 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த ஈஸ்வரன் (42), பரமசிவம் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் போலீசார் இதுவரை 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story