தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 13 May 2022 7:53 PM GMT (Updated: 13 May 2022 7:53 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பழுதடைந்த அடிபம்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் வடக்கு மாட வீதியில் உள்ள சொர்க்கவாசல் எதிரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அடிபம்பு இருந்தது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக இந்த அடிபம்பு பழுதடைந்து பயன்பாடற்று கிடக்கிறது. இதனால் இதனை பயன்படுத்தி வந்த ெபாதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள அடிபம்பை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.
வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம் எச்.எம்.எஸ்.காலனி-டோக் நகர் புதிய பாலம் கட்டப்படும் இடத்தில் பெட்ரோல் பங்க் எதிரில் குடிநீர் திறக்கும் இடம் உள்ளது. இது சேதமடைந்து கடந்த சில நாட்களாக குடிநீரானது வீணாகி வருகிறது. இதனால் சாலையில் குடிநீரானது குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு குறைந்த அளவில் குடிநீர் வினியோகிக்கப்படுவதால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள குடிநீர் திறக்கும் இடத்தை சீரமைக்க வேண்டும்.
நம்பி, நாகமலைபுதுக்கோட்டை.
பயன்பாட்டிற்கு வராத டிரான்ஸ்பார்மர்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூர் ஊராட்சி துத்தியேந்தல் கிராமத்தில் மின்பற்றாக்குறை காரணமாக புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மர் அமைத்து  5 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், குறைந்த மின்அழுத்தத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
பால்கரசு, ஆர்.எஸ்.மங்கலம்.
ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வட்டார தலைமை அலுவலகம், கிளை நூலகம், சமூக நலத்துறை அங்கன்வாடி மையம் மற்றும் வட்டார பயிற்சி மையங்கள் ஆகியவை செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகங்கள் முன்பு உள்ள இடங்களை வாகனங்கள் நிறுத்துவது போன்றவற்றிற்காக ஆக்கிரமித்து வருகிறாா்கள். இதனால் இந்த அலுவலகங்களுக்கு வருபவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த அலுவலகங்கள் முன்பு தேவையில்லாமல் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், வாடிப்பட்டி.
திடீர் மின்தடை
சிவகங்கை மாவட்டம் அருகே செம்பனூர் காலனியில் சில வாரங்களுக்கு முன்னர் மின்கம்பம் சேதமடைந்தது. ேசதமடைந்த மின்கம்பம் மாற்றப்படாத நிலையில் இப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீர் மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்து மின்தடையை தடுக்க வேண்டும்.
டேவிட், செம்பனூர்.
நேரம் காட்டும் வசதி 
மதுரை  ரெயில்வே நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு தினமும் எண்ணற்ற பேர் வருகின்றனர்.  இந்நிலையில் இந்த ரெயில்வே நிலையம் எதிரே சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த சிக்னலில் நிமிடங்கள் ஓடும் வசதி கிடையாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சிக்னலில் நேரம் காட்டும் வசதியையும் சேர்க்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
பொதுமக்கள் சிரமம்
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுமயானம் உள்ளது. இந்த பொதுமயானம் செல்லும் பாதை கருவேல மரங்கள் சூழ்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  பல கிலோ மீட்டர் தூரம் கடந்து பிற மயானங்களில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயானபாதையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
சேதமடைந்த மின்கம்பம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தெற்குதெரு அய்யப்பன் கோவில் எதிரே மின்கம்பம் உள்ளது. இந்நிலையில் இந்த மின்கம்பமானது கடந்த சிலநாட்களாக அடிப்பகுதியில் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தால் இப்பகுதி சாலையை கடந்து செல்ல பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். 
ரவி, மேலூர்.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமப்பட்டு வருகிறார்கள். குடிநீருக்காக பலர் பக்கத்து ஊர்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. மேலும் சிலர் காசு கொடுத்தும் குடிநீரை பெற்று வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு நேரவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவி வரும்தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்.
ஷாம், கமுதி.
தெப்பக்குளத்தை தூர்வார வேண்டும் 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழராஜகுலராமன் கிராமத்தில் தெப்பம் ஒன்று உள்ளது. இந்த தெப்பநீரை குடிநீருக்காகவும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இந்த தெப்பமானது கடந்த சில நாட்களாக மாசடைந்து பாசி படிந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தெப்பக்குளத்தின் நீரை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாசடந்த தெப்பக்குளத்தை தூர்வார வேண்டும்.
குருசாமி, ராஜபாளையம்.

Next Story