சிவகங்கையில் லாரி மோதி தலைமை ஆசிரியை பலி


சிவகங்கையில் லாரி மோதி தலைமை ஆசிரியை பலி
x
தினத்தந்தி 14 May 2022 1:28 AM IST (Updated: 14 May 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் லாரி மோதி தலைமை ஆசிரியை பலி ; பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது பரிதாபம்

சிவகங்கை,
சிவகங்கை சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 59). இவரது மனைவி லதா(53). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லதா சிவகங்கை பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சிவகங்கை பஸ் நிலையம் அருகில் வரும்போது அந்த வழியியே வந்த லாரி ஒன்று லதா மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.  இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story