நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும்


நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 14 May 2022 1:29 AM IST (Updated: 14 May 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் - ராஜபாளையம் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என திட்ட பொறியாளர் பிரபாகரன் கூறினார்.

ராஜபாளையம்.
திருமங்கலம் - ராஜபாளையம் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என திட்ட பொறியாளர் பிரபாகரன் கூறினார். 
நான்கு வழிச்சாலை 
திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. இந்தநிலையில் திட்ட பொறியாளர் பிரபாகரன், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் சங்கரன்கோவில் சாலையில் உள்ள முதுகுடி அருகில் நான்கு வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தனர். 
 இதுகுறித்து திட்ட பொறியாளர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
 திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரையுள்ள சாலையில் இரு பிரிவுகளாக பணிகள் நடைபெற உள்ளது. அதில் முதலில் ரூ.541 கோடி மதிப்பில் திருமங்கலம் முதல் வடுகப்பட்டி வரையும், இரண்டாவதாக ரூ. 723 கோடி  மதிப்பில் வடுகப்பட்டி முதல் ராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி வரையும் நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. 
டெண்டர் 
இந்த பணிக்களுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கப்படும். டெண்டர் கால அளவான 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின் போது வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், உதவிப்பொறியாளர் சதீஸ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story