கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
அதிராம்பட்டினம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரம் தொடர்பாக அங்குள்ள சமூக விரோதிகள் இந்திய எல்லைக்குள் வரக்கூடும் என உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் மற்றும் கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடற்கரை கிராம பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் மீனவர்களிடையே அடையாளம் தெரியாத அன்னிய நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக தகவல் தர வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் கியூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் 24 மணி நேரமும் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story