கழுமங்குடா ஐஸ்வாடி பகுதிக்கு விரைவில் மின்வசதி ஏற்படுத்தி தரப்படும்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கழுமங்குடா ஐஸ்வாடி பகுதிக்கு விரைவில் மின்வசதி ஏற்படுத்தி தரப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
சேதுபாவாசத்திரம்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கழுமங்குடா ஐஸ்வாடி பகுதிக்கு விரைவில் மின்வசதி ஏற்படுத்தி தரப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ஆய்வு
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் மரக்காவலசை ஊராட்சிக்குட்பட்டது கழுமங்குடா ஐஸ்வாடி மீனவ கிராமம். இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மீனவ தொழிலாளர் குடும்பத்தினர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர்.
இதுகுறித்து கடந்த 8-ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி ெவளியானது.
இதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம் மாலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஐவண்ணன், பேராவூரணி தாசில்தார் சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
விரைவில் மின்வசதி
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
செய்தி தாள்களில் வந்த செய்தி அடிப்படையில் நானே உங்களை தேடி இங்கு வந்துள்ளேன். உங்களுக்கு விரைவில் மின்வசதி ஏற்படுத்தி தரப்படும். அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு முதல்-அமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த பகுதிக்கு மின்சார வசதி வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
Related Tags :
Next Story