திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவையாறு:
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்
திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து, பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் வீதி உலா வந்தது.
திருவையாறு தேவஸ்தான டிரஸ்டி கட்டளை சுவாமி கார்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பி்டித்து இழுத்தனர்.
பொம்மை பூ போடும் நிகழ்ச்சி
தேர் நான்கு வீதிகளிலும் வந்து நிலையடிக்கு சென்றது. இதையடுத்து காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், லதா, கருணாகரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் செய்து இருந்தனர். .விழாவில் வருகிற 16-ந்தேதி(திங்கட்கிழமை) சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று, அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story