ஆசனூர் வனச்சாலையில் கரடி நடமாட்டம்


ஆசனூர் வனச்சாலையில் கரடி நடமாட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 2:21 AM IST (Updated: 14 May 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் வனச்சாலையில் கரடி நடமாடி வருகிறது.

தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். 
இந்த நிலையில் ஆசனூரில் இருந்து குளியாடா செல்லும் வனச்சாலையின் ஓரத்தில் நேற்று கரடி ஒன்று வந்தது. பின்னர் அந்த கரடி அங்கும் இங்குமாக சாலையோரம் உலா வந்தது. கரடியை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் சாலையோரமாக நின்று கொண்டிருந்த கரடியை தங்களுடைய செல்போனில் படம் பிடித்தபடி சென்றனர். 

Related Tags :
Next Story