பாளையங்கோட்டையில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு ஜோதி பேரணி
வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டையில் பாஞ்சாலங்குறிச்சிக்கு ஜோதி பேரணி நடந்தது.
நெல்லை:
வீரசக்கதேவி ஆலய விழாவையொட்டி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தொண்டரணி சார்பில், பாளையங்கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தாமிரபரணி புண்ணிய தீர்த்தம் மற்றும் தொடர் ஜோதி கொண்டு செல்லும் பேரணி நடந்தது. தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன் தலைமை தாங்கினார். நெல்லை நாயுடு சங்கத்தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன், அமைப்பின் தலைவர் விநாயகர், செயலாளர் வீரப்பெருமாள், பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜோதி மற்றும் புனித தீர்த்தத்தை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வரதராஜன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், பிரகாஷ் நாயக்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பாளையங்கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பு தொடங்கிய இந்த பேரணி பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி பாளையங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னதாக வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story