தண்ணீர் பந்தல் திறப்பு விழா


தண்ணீர் பந்தல் திறப்பு விழா
x
தினத்தந்தி 14 May 2022 2:38 AM IST (Updated: 14 May 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

இட்டமொழி:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்பேரில், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், இலங்குளம் பஞ்சாயத்து பரப்பாடியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழத்துண்டுகளை வழங்கினர்.
மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் என்.ஞானராஜ், இட்டமொழி ஒன்றிய கவுன்சிலர் பிரேமா எபனேசர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்மபாண்டி, நிர்வாகிகள் செல்லத்துரை, மனோகர், பாலகிருஷ்ணன், சுந்தர், பினேகாஸ், சார்லஸ் உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story