பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை


பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 14 May 2022 2:42 AM IST (Updated: 14 May 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
பண்ணாரி அம்மன் கோவில்
சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், வெள்ளிக்கிழமை, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் அம்மனுக்கு காணிக்கை செலுத்துவர். 
பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பண்ணாரி அம்மன் கோவில் மற்றும் அதன் வளாக பகுதிகளில் 20 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. கோவிலில் வைக்கப்பட்டு உண்டியல்கள் மாதம்தோறும் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். 
ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை
ஆனால் இந்த முறை கோவில் குண்டம் விழா மறு பூஜைக்கு பிறகு உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. ஈரோடு அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அன்னக்கொடி, பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையாளர் மேனகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 20 உண்டியல்களும் திறக்கப்பட்டன. கோவில் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணினர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 26 லட்சத்து 77 ஆயிரத்து 669-ஐ பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 998 கிராம் தங்கமும், 1 கிலோ 231 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

Next Story