வியாபாரிகள் சமாதான கூட்டம்


வியாபாரிகள் சமாதான கூட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 2:50 AM IST (Updated: 14 May 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சமாதான கூட்டம் நடந்தது.

நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சமாதான கூட்டம் நடந்தது.
சமாதான கூட்டம்
நெல்லை டவுனில் ரத வீதிகளில் நிரந்தர கடைக்காரர்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இடையே தகராறு ஏற்பட்டு, இருதரப்பினரும் போாராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டதால் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. நிரந்தர கடைக்காரர்கள், நடைபாதை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
சமூக தீர்வு
கூட்டத்தில் ரத வீதிகளில் 72 நடைபாதை வியாபாரிகள் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் தற்போது 110 கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே அனுமதி பெறாத 38 சாலையோர கடைகளை வருகிற 16-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும். மேலும் 72 கடைக்காரர்கள் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவை தாண்டி கூடுதலாக இடத்தில் கடை அமைத்துள்ளனர். அவர்களுக்கு இட அளவை அளவீடு செய்து மார்க் செய்யப்படும். அனுமதி பெற்ற 72 கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாநகராட்சி சார்பில் 4 மாதங்களுக்குள் அவர்களுக்கு கடை அமைத்து கொடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த கெடு ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.
எனவே அதற்குள் சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு உகந்த 2 மாற்று இடங்களை தேர்ந்தெடுத்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கு போக்குவரத்து நெருக்கடி உள்ளதா? என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை 2 தரப்பிலும் ஏற்றுக்கொண்டதால் சுமூக தீர்வு காணப்பட்டது.

Next Story