தனியார் பள்ளிக்கூட டிரைவரின் நேர்மை சாலையில் கிடந்த ரூ.7 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்தார்
சாலையில் கிடந்த ரூ.7 ஆயிரத்தை தனியார் பள்ளிக்கூட டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
தலைவாசல்,
தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் தனியார் பள்ளிக்கூட டிரைவராக இருப்பவர் அலி (வயது 55). இவர், மும்முடியில் உள்ள கடைக்கு பிரியாணி வாங்க சென்றார். அப்போது சாலையில் கிடந்த மணிபர்சை எடுத்து பார்த்தார். அதனை தலைவாசல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமியிடம் ஒப்படைத்தார். அந்த பர்சை திறந்து பார்த்த போது அதில் ரூ.7 ஆயிரம் இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த பர்ஸ் மும்முடியை சேர்ந்த சேகர் மனைவி செந்தமிழ்செல்விக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் செந்தமிழ்செல்வியை அழைத்து அந்த பணத்தை ஒப்படைத்தனர். டிரைவர் அலியை நேர்மையை போலீசார் பாராட்டினர்.
Related Tags :
Next Story