முதியவரை வெட்டி செல்போன் பறித்தவர் கைது


முதியவரை வெட்டி செல்போன் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 14 May 2022 2:54 AM IST (Updated: 14 May 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே முதியவரை வெட்டி செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 77). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து முனியசாமியை அரிவாளால் வெட்டி, அவரது செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த பாலாஜி (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.

Next Story