பிளஸ்-2 வேதியியல் தேர்வை 6,186 மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்-2 வேதியியல் தேர்வை 6,186 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 14 May 2022 2:54 AM IST (Updated: 14 May 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 வேதியியல் தேர்வை 6,186 மாணவ, மாணவிகள் எழுதினர்.

பெரம்பலூர்:

தமிழகத்தில் தற்போது 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று பிளஸ்-2 வகுப்புக்கு வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 வேதியியல் பாட தேர்வினை எழுத 6,284 மாணவ-மாணவிகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 6,186 பேர் தேர்வினை எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் கணக்கு பதிவியல் தேர்வினை எழுத 1,421 மாணவ-மாணவிகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 1,344 பேர் தேர்வினை எழுதினர். 77 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Next Story